........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 503

இனிய தமிழெழுது!

தமிழ் அழகு! தமிழழகு!
தமிழனுக்குத் தமிழ் அழகு!
தப்பின்றி எழுதிவிட்டால்
ஒப்பில்லா அழகழகு!
எண்ணெய் ஊற்றும் விளக்கு
என்னை ஊற்றும் விலக்கானால்
'ன', 'ள'கரம் மா பிழையாகும்.
நகைப்பின்றி உதவும் அகராதி.

எரியும் விளக்குச் சுடர்
எறியும் விலக்குச் சுடராகி
'ர', 'ல'கரமிங்கு நெருடும்.
நரக நகரமாகும் தமிழ்.

நாம் உதாரணமாகலாம், தலைமுறைக்கு
நல் வழிகாட்டல் உயர்வு.
நன்கொடையிது தமிழுக்கு!
நறும் தேனாம் தமிழினிக்கட்டும்!

-வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.