........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 504

பசுத்தோல் புலி!

பசுத்தோல் போர்த்திய புலியாய்ப்
பாவச் சுவடுகளின் தோலில்
புண்ணியச் சட்டையுடன் இலங்கை அரசு.
இனங்களில் தமிழை இல்லாமல் செய்வதில்
இடைவிடாத செயல்பாட்டால்,
ஐக்கிய நாட்டமைப்பையே ஆட்டிப்பார்க்கும் மனது.
முகாமென்று சொல்லிக்கொண்டு - தமிழ்
முகங்களை வதைத்து மகிழும்,
முகத்திரை கிழியாத முரண்பாடு.
புலிகள் இருந்த இடத்தில்
புல்லை முளைக்க வைத்து,
தொல்லை ஒன்றையே தொடர்ந்துதரும் சாக்காடு.

-சித.அருணாசலம், சிங்கப்பூர்.
 

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.