........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 509

வாழ்க்கையா? வெங்காயமா?

வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;
உரிக்க உரிக்க
கண்ணீராம்.

உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;

வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீர் மட்டும் மிச்சம் போல்.

என்னைக் கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை
யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்! 

-வித்யாசாகர்.
 

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.