........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 537

தீப ஒளி பரவட்டும்!

தீவுகளில் ஒளிவீசும்
தீபாவளி!
சிங்கையைத் தங்கமாக்கும்
தீபாவளி!

உறவுகளால் உள்ளம்
இனிக்கும்!
உதடுகளில் வெல்லம்
இனிக்கும்!

புத்தாடை ஊரெங்கும்
ஜொலிக்கும்!
புன்னகை பாரெங்கும்
ஒலிக்கும்!

ஆடை நாகரிகத்தின்
ஆண்டு விழா!
புத்தாடைகளின்
பொன்விழா!

தீபாவளி வருகிறது
திசையெல்லாம் மகிழ்கிறது!

மத்தாப் ”பூக்களாய்”
மகிழ்ச்சி பூக்கட்டும்!
தித்திக்கும் நினைவுகளை
தீபாவளி வழங்கட்டும்!

இது இந்துக்களின்
இனிப்பு விழா
இதயங்களை
இணைக்கும் விழா!

பட்டுப் பளபளக்கும்
பட்டாசு ஒலி எழுப்பும்
இரவு வானத்தில்
எத்திசையும் மினுமினுக்கும்!

சுற்று முறுக்குப் போல
சொந்தங்கள் சூழவேண்டும்
பற்றுப் பாசத்தால்
பைந்தமிழர் வாழவேண்டும்!

தீப ஒளி எங்கும் வீசட்டும்
தீமைகள் ஓடி மறையட்டும்!

தித்திக்கும் தீபாவளி போல
எத்திக்கும் இன்பம் மலரட்டும்!

புத்தாடை உள்ளத்தில் மகிழ்வூட்டும்
புன்னகை உதட்டைத் தாலாட்டும்!

சின்னஞ் சிறுவரின் மனம் துள்ளும்
சிந்திடும் இன்பம் பெரு வெள்ளம்!

மங்கையர் புன்னகை மத்தாப்பூ
சிங்கையர் மனசுக்குள் மகிழ்ச்சிப் பூ!

இனிப்பு இதழில் குடியிருக்கும்
இன்பத் தீபாவளியை நினைத்திருக்கும்!

தீப ஒளி எங்கும் வீசட்டும்
தீமைகள் ஓடி மறையட்டும்!

-முனைவர் மா. தியாகராஜன்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.