........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 536

தீபமேற்றுவோம்!

அரக்கனின் உயிரை
ஒடுக்கிய நெருப்பு
அணிவகுத்த தீபங்களாய்
ஒளிகூட்டி உயர்ந்த நாள்...

தீமைகளைத் தேடிப்பிடித்துத்
திக்கெட்டும் அழித்த நாள்...

நரகாசுரனுக்கு விடுதலை ஈந்து
நகரோர் வாழ
சுகமாய் வந்த நாள்...

எங்கும் மங்கையர்
ஏற்றும் தீபங்கள்
மங்களம் கூட்டி
மனைகள் விளங்கிட
வந்த நாள்...

இன்று ஒரு சபதம்
ஏற்போம்... எடுப்போம்...
அன்று
ஒரு சூரன் அழிந்தான்
இன்று
பல சூரர்கள் எழுந்தனர்...

மாந்தர் மனத்தையும்
உயிரையும் உடலையும்
வாழ்வையும் வளத்தையும்
அன்பையும் அறிவையும்
அழிக்கப் பிறந்தனர்
அரக்கர் பலர்...

கஞ்சா எனும் புகையரக்கன்...
அபீன் எனும் அவல அரக்கன்...
மது என்னும் வல்லரக்கன்...
இதனைப் போன்று
இன்னும் பலர்
இன்று நம்மைக்
கொல்லத் துடிக்கும்
அரக்கராம் இவர்களை
அழிக்க எழுவோம்...
இவர்கள் அழிந்த நாளே
இனித் தீபாவளி ஆகட்டும்...

வெடிகளை... ... ...
இந்த அரக்கர்களின்
மேனியில் கொளுத்துவோம்...
எங்கும் தீபங்கள்
ஏற்றுவோம்!

-முனைவர் மா. தியாகராஜன்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.