........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 542

எப்படியோ தீபாவளி?

எப்படியோ இனிக்கிறது தீபாவளி
வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய்
ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்;
ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில்
எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

கண்ணீர் கடன் பட்டினி வறுமை
என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்;
நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய
ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள்
வளர்ச்சித் திட்டம் என்றெல்லாம் ஆயிரமாயிரம் பொய்கள்;
பொய்களையுடைத்து சீறி வான் முட்டும் – வண்ண வண்ண
ராக்கெட் வெளிச்சத்தில்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

மரணம் வலி ஏக்கம் இயலாமை நோய்
போதை எல்லாமுமாய் தின்றுதுப்பிய உயிர்;
எல்லாம் மறந்து பார்த்த மழலையின் சிரிப்பிற்காய் செய்த
பலகாரத்தில்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

இறுதிவரை நேர்த்தியில்லாத வரலாறு
ஏதோ சொல்லிக்கொள்ள பாரம்பரியம்
வாய் பேச்சிற்கென்று ஒரு கலாச்சாரம்
முழுமையை தராத கற்பித்தல்;

எல்லோருக்கும் பொதுவிலாத வழிபாடு
மனிதரை கொள்ளும் மதப்பிரிகை
வேற்றுமையை வளர்க்கும் ஜாதியமைப்பு
முற்றும் தீராத தீண்டாமை;

இன்னும், அதிகம் அவதியுறும் மகளீர்
சமரசமுறாத கற்பு திணிப்பு
வெட்ட வெட்ட துளிர்க்கும் சமுதாய சீர்கேடுகள்
எல்லோரும் பெறாத இறைஞானம் – என

இழைக்கப் படும் அத்தனை கொடுமைகளும்
சேர்ந்து கொடுக்கும் – ஒழியா – மானுட வதைகளை கடந்தும்
தன் பெற்றோர் காட்டிய பாதையில்; எப்படியோ
இனித்தேத் தொலைக்கிறது தீபாவளி!!

-வித்யாசாகர்.

 

 

 

 

 

m

 

வித்யாசாகர் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.