........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 548

ஐயப்பா... இனி நீதானப்பா!

மெய்யான விரதம் காத்து
நெய்கொண்டு போவோமப்பா!
பொய்யான வாழ்க்கை துறந்து
நெய்யாக உள்ளம் உருகி
அய்யனைக் காண செல்வோமப்பா!

கார்த்திகையில் மாலை போட்டு
காலை, மாலை சரணம் சொல்லி
கண்களிலே உன்னைக் கொண்டு
கல்லும் முள்ளும் பஞ்சு என்றோம்
கற்பூர ஜோதியில் கலந்திருக்கும் ஐயப்பா
காடு,மலை கடந்து வந்தோம் ஐயப்பா
கண்ணார உன் தரிசனம் காண
அருள்புரிவாய் ஐயப்பா!

பதினெட்டு முறை சென்றோம்
பதினெட்டு படி மிதித்தோம்
குருசாமி பட்டம் பெற்றோம் என்ற
குழந்தைப் பேச்சு எதுக்கப்பா!
எத்தனை முறைபோனாலும் - நாம்
கன்னிச் சாமி தானப்பா
எல்லார்க்கும் குருசாமி அவனொருவன் தானப்பா!

பக்திக்கு வயதில்லை
சிறியவர், பெரியவர் பேதமில்லை
உண்மை பக்தி உள்ளத்தில் இருந்தால்
றைவன் உறையுமிடம் அதுதானப்பா
பக்த பிரகலாதன பாருங்கப்பா - அவன்
நம்பிக்கையே நமக்கு பாடமப்பா!

ஞானம் என்பது எல்லார்க்கும்
நாற்பதாவது வயதில் வரும் என்று
சொல்வதெல்லாம் பொய்யப்பா!
திருஞானசம்பந்தரைப் பாருங்கப்பா! அந்த
நாலு பேரில் நல்ல சாட்சியப்பா!

கலியுகக் கடவுள் ஐயப்பனும் சிறு
பிள்ளை தானப்பா!
சாதி பேதம் இல்லாத சமத்துவபுரி
அவன் இல்லமப்பா!
சபரிமலை இப்போ தங்கமலை
ஆச்சியப்பா - இனி நிச்சயமாய்
மனிதமனமும் ‘தங்கமாக’ மாறுமப்பா!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.