........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 556

நட்பின் எதிரி

விருப்புடை குளிர் தென்றல்
கருத்து சுதந்திரம். நட்பிற்கு
அருத்தமுடை நெருக்கம் தரும்.
பெருத்த யோகம் உறவிற்கு.

கருவப் போர்வையுள் சுருண்ட
செருக்குடை மனதாளர் உண்மைக்
கரிசன வண்ணத்தை உணர்வில்
சொருகும் ஊசியாக உள்ளெடுப்பார்.

கரிசனம் எருக்கம் பூவாகும்.
கருத்தில்லா வெறுமையாய் நெருக்கம்
விரைந்து பாலைவனப் பாதையேகும்.
கரையும் சந்தனமாகும் நட்பு.

நட்புக் குடை விரித்துக்
கட்புலன்கள் அன்பில் நனைத்து
உட்புக அனுமதிக்கும் இனிமை
திட்டமற்றது. இனிய மழையது.

சட்டென முட்டித் தள்ளும்
கோட்பாடுகள் இயல்பற்றது – உலகின்
பட்டவர்த்தன உண்மை எல்லாவற்றையும்
கொட்டக் கொட்டப் பார்க்கிறது.

கற்றுக் குட்டித்தனம் கண்களை மறைக்கையில்
நட்பெனும் தவம் கலைத்து
வட்டமான பிரபஞ்சத்துள் எங்கே!
எட்டியடி வைத்தல்...எங்கே! எங்கே!

-வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.