........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 572

புதிய முகத்துடன் வா!

புத்தாண்டே
புன்னகை தளயத்தளய
பூரிப்பு மலர மலர
புதிய முகத்துடன் வா..!

உன் நாட்களின் நகர்வு
நல் பொழுதாக
அடுத்த விடியலிலும்
சிரித்த முகத்துடன் வா..!

எங்கும் எதிலும்
பொங்கும் ஆனந்தம் நிலைக்க
விட்டுக்கொடுத்தல் உணர்த்தி
நேச முகத்துடன் வா..!

நீ நான்
பேதங்களற்ற உறவு
தேசங்கள் தோறும் விரிய
பாச முகத்துடன் வா..!

பயங்கர வாதமும்
விரோதமும் விலகிப் போய்விட
ஒற்றுமை பட்டொளி பறக்க
கருணை முகத்துடன் வா..!

வறுமை ஒழிய
வாழ்வுரிமை உயர
எல்லோரும் சமமென
சாத்திய முகத்துடன் வா..!

சாதியும்
மதமும் சாக்கடை நாற்றமாய்
மனித இனம் சந்தன மணமாய்
சாதனை முகத்துடன் வா..!

இல்லாமையற்ற
வல்லமை வாழ்வில்
நிரந்தரம் பெற்றிட
பொக்கிச முகத்துடன் வா..!

- பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு