கவிதை:
571
சுனாமியின் சுவடுகள்

கடல்தாயே உன் அலை கரு நீலச்காறோ?
கனகாலம் பொருள் தந்தாய் நீ வள்ளல் தாயோ
மலை போல எம் வாழ்வை உயராக்கி விட்டு
முறை கேட்டு ஈன வந்து எம்முறவைத்தின்றாய்
தலைகொன்னு வணங்கும் உன்னவர் உடல்கள்
ஏன்?
தரணித்தாய் மடியில்தலை சாய வைத்தாய்
உன்மடி ஏறி உருக்கு செல்வார்
விடி வெள்ளி பார்த்து உனக்கு நன்றி சொல்வார்
தாயே உன் அலை தாலாட்டுப்பாட
கரையோரம் நாங்கள் பயமின்றித்தூங்க
மீனவர் எல்லாம் திரை கடலேறி
மீனினம் அள்ளி விடியலில் வருவார்
இத்தனை நன்மை நீ செய்து விட்டு
நித்தமும் எம்மை ஆழ்ழாக்கிவிட்டு
சித்தம் முழுக்க உன் அன்பை கொடுத்து
சீக்கிரம் அவர்கள் உயிர் குடித்தாய் ஏனோ?
தரை நிலம் குட உன்போல இல்லை
திரை எழுந்தாளியாய் கொள்ளவா வந்தாய் ?
துறை முக அலையாய் தூரத்தில் வந்தாய்
திரை முகம் காணமுன் தீப்போல தின்றாய்
மதம் இன்றி மனிதரை மடியோடு அணைத்தாய்
மதம் கொண்டா மனிதனை மடி வீழ செய்தாய்?
பூமியின் கன்னத்தில் முத்தமிட்டுச்
சென்றாய்
சாமிகூட நினைக்கவில்லை பலர்
சரிந்து போனார்
ஆவிகளாக உன்னிடம் வருவார்
ஆழியே ஓர்நாள் பதில் அவர்க்கு சொல்வாய்...
உறவினைப்பிரித்தாய் உயிர்களைச்
சிதைத்தாய்
உடைமைகள் இழந்தோம் உண்மைகள் மறந்தோம்
உதடுகள் வெடிக்க உரத்துக் கத்தினோம்
உனக்கு அக்குரல் சோகம் இல்லையா?
பதுமையின் நடுவில் பயங்கரம் எனப்பார்
பாழாகவில்லை அப்பழமொழி இன்று
பாக்கள் எல்லாம் உன் அழிவை பாடுதே
பூக்கள் கூட உன்னை நினைத்து வாடுதே...
ஆழியே இனிமேல் அகங்காரப்படாதே!!
- கிருஷ்ணா,
யாழ்ப்பாணம், இலங்கை.
|