........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 577

கருவின் ஆசை

அம்மா...!
தாய்ப்பால் குடிக்க ஆசை
தரையில் தவழ ஆசை
தாத்தாவின் தோள்மீதமர்ந்து வலம்வர ஆசை
தாத்தம்மாவிடம் கதை கேட்க ஆசை
தூளியில் படுத்துறங்க ஆசை

அம்மா என்று அழைக்க ஆசை
அப்பாவின் அறிவுரை கேட்க ஆசை
பாவாடை உடுத்திக்கொள்ள ஆசை
பள்ளிக்கூடம் போக ஆசை
தமிழ் ‘பா’ கற்க ஆசை
கல்லூரிக்குப் போக ஆசை
பட்டம் பெற ஆசை

காதலிக்க ஆசை
கல்யாணம் செய்துகொள்ள ஆசை
கணவனின் கரம் பிடித்து நடக்க ஆசை
....... ........ ..........
....... ........ ..........
....... ........ ..........
ஏனம்மா உனக்கோ உன் கருவறையிலேயே
எனக்கு கல்லறை கட்ட ஆசை?

-முனைவர்.கு.சிதம்பரம், சென்னை.

 

 

 

 

 

m

 

முனைவர்.கு.சிதம்பரம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு