........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 576

பாறையில் பயிர்?

கற்களோடு கள்ளிகள் வளர்ந்த
கடும் பாறையில் யார்
கருத்துடன் பயிரிட எண்ணுவார்!
கடின முயற்சியில் உழுவார்!
கடைத்தேற விரும்பும் ஒரு
கபோதியும் கரிசனம் கொள்ளான்.

மனவயலில் சிக்கல் விதைகள்
இனவாரியாய் விதைக்கப்பட்டு
கனதியான ஒரு விளைச்சலில்
தனவந்தனாக எண்ணும் ஆட்சியாளன்
தகுதிகாண் மனிதனாவதெங்ஙனம்!
தரம்காண் அல்ப்ஸ் ஏறுவதெங்ஙனம்!

கொட்டிக் கொடுத்த மதிப்பைத்
தட்டிக் கொட்டும் போது
குட்டக் குட்ட யார்
குனிவார்! தலை குனியார்!
குட்டக் குட்டத் தலை குனிதலும்
குற்றம்! பெரும் குற்றமே!

சொன்ன சொற்களுக்குச் சோடனையாய்ப்
பொல்லா இறகு கட்டி
மெல்லப் பறக்க விடுதலும்
பொல்லா வன்மக் கசடுதான்.
வெல்லுமொரு தந்திர வழிதான்!

நேராக சமூகத்தில் ஊருவி
வேராகும் அநீதிப் புழுக்களை
போரெதிர் கொள்ளல் போன்று
ஏரெனும் எழுதுகோலால்
வேரெடுத்து உழுது பண்படுத்தல்
பாரிய பொறுப்புடை வினை.

-வேதா இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு