........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 585

புத்தாண்டே வருக...!

காலண்டரில் கண்விழித்துக் கணிப்பொறியில்
உலா வரும் புத்தாண்டே வருக!

பூமியின் புனிதப் பயணத்திற்கு
ஆண்டுதோறும்
ஆண்டு விழா நடத்தும் புத்தாண்டே!

உன் தங்க வருகையால்
எங்கள் சிங்கையை உயர்த்து!
மனித இனத்தின் சார்பில்
உனக்கொரு மனு செய்கிறேன்!

மழைநீர் கொண்டு வந்து
எங்கள்
புதுநீரை புதுமை செய்!

வதம் செய்யும்
மதம் ஒழித்து
வளம் செய்யும்
பலம் தருக!

புத்தாண்டே.. .. ..
பூகம்பத்தின் நடுக்கம்!
புயலின் சீற்றம்!
தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்!
மதங்களின் போராட்டம்!
விபத்துக்களின் விபரீதம்
இவையெல்லாம்
கொடுத்து கொடுத்து
எங்களைக் கெடுத்தது போதும்!

பூகம்பம் தடுத்து
பூ மது தூவு!
புயலை ஒழித்துப்
பூங்காற்று வீசு!

மதங்களைக் களைந்து
மனிதத்தை நடவு செய்!

கடலின் மார்பில்
குடி நீர் சுரந்திடு!
கவிதையின் சுகத்தை
வாழ்வில் வழங்கிடு!
வருக புத்தாண்டே வருக!

-முனைவர். மா.தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு