........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 588

கூலிக்காரன்.

கதிரவனுக்கு முன் எழுந்து
அவன் மறைவிற்குப் பின் திரும்புகிறான்

இதற்கிடையில்...
மெலிந்து நலிந்து வாடி வதங்கி
தாங்க முடியா சுமை தூக்கி
பாதையில் பாதம் நோக நடந்து
மழை வெய்யில் பாராது
மாடாய் உழைக்கிறான்...
வாழ்க்கையில் போராடுகிறான்

இவனை நம்பியிருக்கும்
இவன் குடும்பத்துக்கு
இவன் குடும்பத் தலைவன்
ஆனால்
ஊருக்கோ
இவன் கூலிக்காரன்.

-கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத்,
தும்புளுவாவை, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு