........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 596

எதிர்கால இளைஞனே!

ஓ! இளைஞனே
நீ வளரும் நாற்று
உன் சுவாசக் காற்று
பொதுவுடமை லட்சியத்தில்
பூத்த பூவாய் மணம் வீசும்
உறுதியான நெஞ்சில்
உழைப்பை தேடு
உன்னதமான உயர்வுக்கு
அறநெறியை நாடு
வரதட்சணை கேட்டு
வஞ்சியரை வாட்டும்
வழக்கத்தை மாற்று
வாழ்வின் புதிய பாட்டு
ஏழைகள் ஏணிகளாய்
ஏய்ப்பவர்கள் மாளிகையாய்
மாறுகின்ற காலம்
மாற்றத்தைக் கொண்டு வா
விண்அதிர நடைப்போட்டு
விடியலைக் கொண்டு வா
எதிர்கால இளைஞனே!

-தஞ்சை ஹேமலதா,   வெண்டையம் பட்டி.

 

 

 

 

 

 

 

m

 

தஞ்சை ஹேமலதா அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு