........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 595

தமிழ் மறந்து...!

தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்
“ச்சீ” என முகம் சுளிக்கிறார்!

தகரக் குடுவையில் இனிப்பான விடயமென்றால்
முகம் மலர்ந்து சுவைக்கிறார்!

தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த
ஆங்கில விசம் இனிக்கிறதாம்!

நாகரீக மோகத்திலே சவ்வாது
சாக்கடை பேதமறியா அலறுகிறார்!

தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்
தட்டி தலைக்குனிவு செய்கின்றார்!

அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல்
நடக்குமோ எந்நாட்டிலும்!

புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்
புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்!

தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்
தற்குறி புருஷரன்றோ இவர்கள்!

பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை
பாரமெனத் தூக்கி எரிந்தாயோ!

ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய்
தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு