........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 594

எங்கும் இன்பம் பொங்க..!

மேக வீதியில் ஒரு யாக வேள்வி!
இரவு செய்து எழுந்தான் பகலவன்!
வீரன் வாளாய்
வேங்கையின் பாய்ச்சலாய்
மாறன் எழுந்தான்
மண்ணகம் சிவந்தது!

மக்கள் மனத்தே மகிழ்வு பொங்க
வானின் விளக்கிற்குப்
பொங்கல் இட்டனர்!

மஞ்சள் சுற்றிய மண்பானை...
அடுப்பினில்
அரிசியோடு சர்க்கரையும்
அதன் வாயில் பொங்கிட...
பொங்கலோ பொங்கலென
பூமியில் கூவினர்!

ஓய்வின்றி மக்களுக்கு
ளிதந்த உத்தமனுக்கு!
நன்றிப் பெருக்காய்
முன்றில் விளக்கேற்றி
பொங்கல் படைத்தனர்!
புத்தாடை அணிந்தனர்!

அரும்பிட்டு! கரும்பிட்டு!
அருகம்புல் இட்டு!
விரும்பும் மனத்தை
மேலும் அங்கிட்டு
மேதினி தன்னில்
ஆதவன் சிறக்கப்
பாடினர்; பொங்கல் பாட்டை... ஆம்!
படும்பாட்டைப் பாடினர் !
இனி
முட்டாள் மனத்தே
மூளை பொங்கட்டும்!
மூடரின் அறியாமை
விலகி ஓடட்டும்!
எங்கும் மகிழ்வின்
இன்னொளி பொங்கட்டும்!
இதயம் தன்னே
அன்பு பொங்கட்டும்!
சிங்கை மாந்தர்
வாழ்வு பொங்குக!
எங்கும் இன்பம்
இனிதே பொங்கட்டும்!

-முனைவர். மா. தியாகராசன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு