........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 593

வருகிறாள்...! வருகிறாள்..!!

பொங்கல் பெண்ணாள்
வருகிறாள்! வருகிறாள்!!
பொங்கல் பெண்ணாள்
வருகிறாள்! வருகிறாள்!!

பழைய பொருள்களைக்
கழித்து எறிந்து
வெள்ளை சுண்ணம்
வீட்டுக்கு அடித்து
சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து
நச்சுக் கிருமியை நசுக்கி
அழிக்கும் சாணம் தெளித்துக்
கோலமிட்டு
வருகிறாள்! வருகிறாள்!!
பொங்கல் பெண்ணாள்
வருகிறாள்! வருகிறாள்!!

மாவிலை! வேப்பிலை!!
மணக்கும் ஆவாரம்பூ
நஞ்சுடை உயிர்களை
பீளைப்பீவும் சேர்த்துக் கட்டிய
காப்புக் கட்டை வீட்டில் கட்டி
கடிக்கச்சுவை தரும்
கரும்போடு மஞ்சளும் இஞ்சியும்
நட்டுக்கட்டி
வருகிறாள்! வருகிறாள்!!
பொங்கல் பெண்ணாள்
வருகிறாள்! வருகிறாள்!!

புத்தாண்டு அணிந்து
புத்தரிசி இட்டும்
பொங்கலோ பொங்கலென்று
பொழிந்திடும் மகிழ்வாலே

இன்பமொழி எழுப்பிட
வருகிறாள்! வருகிறாள்!!
பொங்கல் பெண்ணாள்
வருகிறாள்! வருகிறாள்!!

புத்தாடை அணிந்தும்
புத்தரிசி இட்டும்
பொங்கலோ பொங்கலேன்று
பொழிந்திடும் மகிழ்வாலே
இன்பமொழி எழுப்பிட
வருகிறாள்! வருகிறாள்!!

பொங்கல் இதுவே போதுமா
புகட்டும் பாடம் அறிவோமா
பழைமை மண்டிய பழக்கங்களைப்
பகுத்தறிவுக்கொவ்வா
நம்பிக்கைகளைக்
கலைந்து எறிவோம்!!

நச்சு எண்ணங்களை
நாசம் செய்து
தூய வெள்ளை உள்ளமே
துலங்கப் பெறுவோம் நன்கே

மாந்தர் இனத்தை மழித்து அழிக்கக்
காத்துக் கிடக்கும்
கடுவிட ஆயுதங்கள்
கருணையில்லா வன்முறைச் செயல்கள்
மனிதனைக் கடத்தி வருத்தும்
கொடுமைச் செயல்கள்
மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால்
மனிதத் தன்மையை
இழக்கும் கொடுமைகள்
தலையெடுக்கா வண்ணம்
தடுத்துக் காப்போம்!!

காற்றுக்குக் காப்பிடுவோம்
கலங்கப் படாதிருக்கவே
பிணிகளுக்குக் காப்பிடுவோம்
மனித குலத்தைப் பீடிக்காதிருக்கவே
ஒருவரையும் ஏற்றிப் போற்றும்
மனிதநேயமெனும் மாண்புறு பண்பை
மாநிலமெங்கும் நட்டுச் சிறப்பாய்க்
கட்டிக் காப்போம்!!

அன்னைத்தமிழ் அவனியில்
இருக்கும் தடைகள்
இரியவே காப்பிடுவோம்!

எல்லார் உள்ளத்திலும்
இன்பமும் அன்பும்
எளியோர்க்கு உதவிடும்
இனிய பண்பும்
பொங்கல் போல் பொங்கி வழியட்டும்!
வாழ்க்கையில் அமைதித்
தங்கிப் பொழியட்டும்!!
வையகத்தில் அமைதி
ஓங்கிப் பெருகட்டும்!!!

-முனைவர். மா. தியாகராசன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு