........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 598

சருகின் சங்கீதம்

கண்ணாடி நினைவுகளால்
கருக்கலான
இரவு.
கருவேல முள்பட்டு
கிழிந்து போன
முந்தானையாய் உன்முகம்.
நினைவுக் குடிசையின்
இடைவெளி வழியே
சமாதியான ஒளிக்கீற்று.
சிலநாள் வெளிச்சம்
மழைநாளில் நடுக்கம்.
உதிர்ந்து போன
சருகுகளுக்கிடையே
ஓயாத
உன் காலடிஓசை.
கண்ணாடிக்குடுவைக்குள்
பாதரசமாய்
உருளுகிறது வாழ்க்கை.

-முனைவர்.வி.தேன்மொழி, சிங்கப்பூர்.      

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு