........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 611

அள்ளி வீசாதே...!அவதிப்படாதே...!!

ஏ மானிடா!

உன்
முகத்துக்கு
முற்போக்காய்
முலாம் பூசாமல்
முழுமனதோடு வருகை தா!

உனது செல்வம்
உனதான அந்தஸ்து
உனக்கு தரப்பட்ட மேடை
உனதே உனதான நாக்கு என்று
உண்மையாய் இல்லாதவற்றையும்
உளறி விடாதே..

வெறும் பேச்சில் மாத்திரம்
நீ உச்சரிக்கிறாய் வேதம்...
நிஜத்தில் புனிதனாயிருக்காத
நீ சுட்டெரிக்கும் பூதம்!

போலியாய்
வாக்குறுதிகளை
அள்ளி வீசி...
இறுதியில்
காலியாய் நிற்காதே
மேனி கூசி!

கோர்வையாய் பலதையும்
பேசி விடாது...
பணிவாய் நடந்திடு
துன்பங்கள் ஏது?

சந்திரனைக் காட்டிக்காட்டி
பொய் கூறியது போதும்..
நீ அரிச்சந்திரனாயிரு
மெய்யாய் இனிமேலும்!!!

-வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.    

 

 

 

 

 

 

 

m

 

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு