........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 615

ஒரே பார்வை..!

காதல்! என்பது பொய்.
காதலிப்பவர்கள் மயக்கத்தில்
இருப்பவர்கள்...என்றுதான்!
இன்று வரை என்
மனத்தின் வரையறை!

ஒரு நொடி!
உன் பார்வையை என் மீது பதித்து
வாழ்நாள் முழுவதும்
என்னை அடிமையாக்கினாய்!

வார்த்தைகள் கிடைக்கவில்லை
உன்னை வசைபாட..! என்
நினைவை மாற்றி உன்
விழிகளுக்குள் சிறைபிடித்தாயே!
எப்படி வந்தது!
என்னுள் இந்த மாற்றம்?

வழியறிந்து சென்றவனுக்கு
என் விழி மறக்க!
எழத் தெரியாத என் கைகளில்
எழுத்தாணியில்
வெள்ளி எழத்துக்கள்!
என் நினைவில் உன்
ஒரு நொடி பார்வை...
நானும் மயக்கத்தில்!
தொடங்கி விட்டது..
என் காதல் பயணம்.
உன் விழி பார்வையில்...!

-சந்திரசேகர், இராஜபாளையம்.    

 

 

 

 

 

 

 

m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு