........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 614

முடிவில் தெரிந்தவை..!

சிறைபட்ட
கிளிக்குத் தெரியும்
வலைக் கூண்டின்
வாதை...!

அடிபட்ட
பாம்புக்குத் தெரியும்
உயிர்த் துடிப்பின்
வேதனை...!

பிடிபட்ட
மீனுக்குத் தெரியும்
தூண்டில் முள்ளின்
கூர்மை...!

சிக்கிக் கொண்ட
பூச்சிக்குத் தெரியும்
சிலந்தி வலையின்
வலிமை...!

மாட்டிக் கொண்ட
எலிக்குத் தெரியும்
எலிப் பொறியின்
தந்திரம்...!

விழுந்து விட்ட
விட்டிலுக்குத் தெரியும்
விளக்கு ஒளியின்
வெப்பம்...!

தோல்வியுற்ற
காதலர்க்குத் தெரியும்
சோகத்தின் பாரம்...!

-பாளை.சுசி.    

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு