........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 617

காதலர் தினம்...!

ஓ.. .. ..ரோஜாக்களே!
அன்பர்கள் தினம் என்பதை
அறிவீர்களா?

இத்தனைநாட்களாக
நீங்கள்
தலையில் சூட மலர்ந்தீர்கள்
இன்று
தலை(வி)க்குச் சூட மலர்ந்தீர்கள்!

இதுவரை ‘வாசம்’ வீசிய நீங்கள்
இப்போது ‘நேசம்’ வீசுங்கள்

ஓ.. .. அன்பர்களே
இதழ்கள் பரிமாறுங்கள்
இதயங்களை இடம் மாற்றுங்கள்
‘ஈமெயில்’ பொத்தானில்
‘பூமயிலோடு’ முத்தாடுங்கள்

அன்பின் முகவரியை
அகத்திற்குள் எழுதுங்கள்
‘அன்பரின்’ முகவடிவில்
அதிசயத்தைப் பாருங்கள்

காதல் போயின் சாதல் வேண்டாம்!
சாதல் என்றாலும்
காதலே நன்று என்று
‘கவிதை பாடுங்கள்’

ஓ.. .. அன்பர்களே
இதுவரை சூரியனைச் சுற்றிய பூமி
இப்போது
உங்களைச் சுற்றுகிறது பாருங்கள்!

ஓ.. .. கடல் அலைகளே!
சுனாமியிடம் சொல்லி வையுங்கள்
கடற்கரை மணல்வெளியில்
காதல் தவம் நடக்கிறது
ஜோடிப் புறாக்கள்
கூடிக் களிக்கின்றன.. ..

இது காதலர் தினம்!
கடலலை தினம் அல்ல!
இன்று காதல் திருமணங்கள்
கவிதை எழுதுகின்றன

அன்பர் தினம்
ஆனந்தம் காண்கிது
ஆகாயமெங்கும்
ரோஜாவே மலர்கிறது!

-முனைவர். மா.தியாகராசன், சிங்கப்பூர்.    

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு