........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 618

சாதல் நன்றே...!

அடிமனதில் புதைந்திருக்கும்
ஆசை நினைவுகள் எழுகிறதே...
கொடி இடையாள் உன் பிரிவால்
நிம்மதி என்னில் தொலைகிறதே!

நித்தம் நித்தம் என் விழியில்
ரத்தம் தான் வழிகிறதே...
யுத்தம் புரிந்து உன் எண்ணம்
வாழ்க்கையை அழிக்கிறதே!

ஏன் பெண்னே கனவுகளிலும்
நீ வந்தாய் தவறாது...
உன் நினைவிலாவது நானில்லை
சொல் நீ - என் தவறேது?

அன்று
மழைத்துளியின் ஸ்பரிசத்தில்
உன் மலர்வதனம் கண்டேனே...
காதலாகி கசிந்துருகி
உன் ஞாபகம் கொண்டேனே!

பின்பு
வாய்ப்பு வந்த போதெல்லாம்
வாய் திறந்து பேசேனே - உன் திருமண
செய்தி வந்தபோது
என் தவறை உணர்ந்தேனே!

காதலெனும் வெள்ளமெனை
நிர்க்கதியாய் ஆக்கியதே..
சாதல் தான் நன்றென்று
பைத்தியமாய் மாற்றியதே!

-வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கை.  

  

 

 

 

 

 

 

 

m

 

வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு