........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 619

கண்ணாமூச்சி ஆடுகிறானே...!

கடவுள் காலாவதி ஆகிய சொல்
என் இப்போதைய நிலையில்
பிறப்பை தந்தான்
சிரிப்பைத்தந்தான்
ஆசைகளைதந்தான்
இவைகளை அர்த்தமாக்க தவறி விட்டான்

தனிமையில் பிறக்க வைத்து
அழவே இனி கண்ணீர் இல்லாமல் அழ வைத்து விட்டான்
ஆயிரம் நன்மைகளை செய்ய மனம் தந்தவன்
அறியாமல் கூட பிழை செய்ய மனம் கொடுக்காதவன்
நல்லகுணம் ஏராளம் கொடுத்தவன்
வறுமையின் விளிம்புக்கே செல்ல வைத்து விட்டான்

வறுமை என்பது
காதலில்
விருப்பங்களில்
இன்னும் எவை எவையில்

.................

இனி வெற்றி தந்தால் நான் ஆத்திகன்
இல்லையில் நான் நாத்திகன்
பறக்க ஆசை கொடுத்தவன்
சிறகுகளையுமல்லவா கொடுக்க வேண்டும்

திறமைகளைத் தந்தவன்
கலங்களை ஏன் திறக்க மட்டும் மறுக்கிறான்
கடவுளின் மனமே இப்படி என்றால் மனிதரின் மனம்
எவளவு கீழ்த்தரமானதாயிருக்கும்

படிப்பு நான் படித்ததால் பயனில்லாது போயிற்று
நிழலுக்கு நான் ஒதுங்கியதால் மரமே முறிந்தது
நான் சென்ற பாதைகள் முட்புதர்களாக மாறியது
ஏன் படைத்தவன் இன்னும் பயனடைய வைக்கவில்லை
கண் முன் நின்றால் கேட்பேன்
கண்முன் நிக்காது கண்ணா மூச்சி ஆடுகிறானே....

-கிருஷ்ணா, யாழ்ப்பாணம், இலங்கை.  

  

 

 

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு