........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 620

ஆசை...! ஆசை...!

தேனடைத் தெளி தேனாய்
தித்திக்க ஆசை..

தித்திக்கும் தீங்கனியாய்
சுவைபட ஆசை..

உயரப் பறக்கும்
ஊர்க் குருவியாய்
உருமாற ஆசை..

கார்மேகக் கூந்தலில்
காதலன் சூடிய
ஒற்றை மலராய்
உயிர் மடிய ஆசை..

நீல வண்ண
வான் மீது
தனி நிலவாய்
உலாவர ஆசை..

பாலைவனத்து
மணல் மேட்டில்
வற்றாத நீர் ஊற்றாய்
வளம் கொழிக்க ஆசை..

நத்தை வயிற்று
நல்முத்தாய்
நானிலத்தில்
நான் பிறக்க ஆசை..

அகல் விளக்கானாலும்
ஒளிவிளக்காய்
இருள் நீக்க ஆசை..!

-பாளை.சுசி.    

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு