........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 621

குழந்தையின் மரணம்..!

ஒரு கோடி அல்லிக்கு நீ ஒரு நிலவு
ஒரு கோடி தாமரைக்கு நீ ஒரு கனவு
தேவதையின் சொந்தப்பிள்ளை
நீ எனக்கு செல்லப்பிள்ளை
தாலாட்டும் நினவு வாழ்க!

கண்ணுக்குள் மணியாக
நெஞ்சுக்குள் நினைவாக.. நீ வாழ்கிறாய்...

பொன்னுக்குள் ஒளியாக..
பூவுக்குள் மணமாக... நீ வாழ்கிறாய்...

மேகம் உந்தன் ஆடையான...
சோகம் எந்தன் ராகமான
கிள்ளை பேச்சு காதல் பேசு
முல்லைப் பூவின் வாசம் வாழு...

சொல்ல ஒரு வார்த்தையில்லை...
சொல்லியம் போதவில்லை...

அன்புக்கு அலையாக...
பண்புக்குப் பரிசாக... நீ வாழ்கிறாய்..
குயிலுக்கு குரலாக..
மயிலுக்கு நிறமாக... நீ வாழ்கிறாய்..

மழலை என்றும் இயற்கையான
மனமொழி வேதமான...

நினவில் ஆடும் மலரே..
உறவில் வாடும் மனமே...

சொல்ல ஒரு வார்த்தையில்லை...
சொல்லியம் போதவில்லை...!

-விஷ்ணுதாசன்.    

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு