........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 624

தீவிரவாதம் வேண்டாம்!

மதம் இனம் எனும்
மாயையில் சிக்கி
தீவிரவாத
முத்திரையுடன்
உலகை உலுக்கும்
உடன்பிறப்பே...

இந்த
வெறியாட்டத்தில்
சரிவது மாடிகள்
மட்டுமல்ல
மதிப்பு மிக்க
மனித உயிர்களும்தான்...

துப்பாகிகளும்
அணுகுண்டுகளும்
துயர் துடைக்க உதவாது!
காந்திய வழியைப்
பின்பற்றினால்
காலனையும் வெல்லலாம்...
காடுகளை விட்டு
வெளியே வாருங்கள்...

அணுகுண்டு
அறிவியலுக்கு மட்டுமே
பயன்படட்டும்...
அறியா மனிதர்கள்
ஆயுள் நீடிக்கட்டும்...
தீவிரவாதத்தை தீவிரமாக
வதம் செய்வோம் வாருங்கள்!!

-கற்பகம் ரவி, தேனி.

 

 

 

 

 

 

 

m

 

கற்பகம் ரவி அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு