........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 625

புனிதமாய் வீடு!

விட்டத்தைப் பிரித்து
ஒட்டடை அடித்து
வீட்டைப் பெருக்கி
கழிவறை கழுவி

எப்படித்தான் சேருகிறது
இவ்வளவு அழுக்கு
அவ்வப்போது அக்கறையாய்
துடைத்துத் துடைத்தும்...?

வெளியே செல்ல
வேண்டி வந்தது.
வெள்ளிக்கிழமை.
விசேச பக்தி...?

சாக்கடை ஓட்டம்
வண்டிப் புகை மூட்டம்
அழுகல் மாமிசங்கள்
அடைத்த வீதிகள்

வீச்சங்கள் துரத்த
பூட்டிய வீட்டை
விரைந்து திறந்தேன்..
புனிதமாய் இருந்தது வீடு...!!

-தேனம்மை லெட்சுமணன்.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு