........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 626

பாவம் அந்த மயில்!

என் கனவு பட்டறையில்
உன்னை பற்றிய கவிதைகளே
கூரேற்றபடுகின்றன.

நீ சுவாசிக்கும் காற்று உன்னை
விட்டு விடை பெறும்போது
சோகமாய் செல்வதாய்
பூக்கள் புலம்புகின்றன

மயிலுக்கு போர்வை கொடுத்தான்
பேகன் - வள்ளல் உன்னை பார்த்து
இருந்தால் மயில் ஏமாந்து இருக்கும்
பரவாயில்லை, மயில் பாவம்....

சுட்டெரிக்கும் சூரியன் கூட என்
தேவதை நீ சாலையில்
இறங்கி நடக்கும் போது
மேக கூட்டங்களுக்குள் ஓடி ஒளிந்து
வெப்பம் தணிக்கிறது உனக்காய் ....

நான் வளர்க்கும் பூக்கள் கூட காதல்
சொல்லி தரச்சொல்கின்றன உன்னிடம்
காதல் சொல்வதற்காக... நான் சொல்லித்
தரவில்லை அதனால் சீக்கிரம்
வாடுவதாய் கேள்வி....

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு