........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 627

என்னுள் என்னை...!

நினைவென்னும் மரத்திலிருந்து
நித்தமொரு கனி பறித்தேன்
நிறைந்த சுவை தந்த சிலவும்
நீங்காத கசப்புப் பலவும்

வாழ்க்கையெனும் பாதையிலே
விரைந்த பல பயணங்கள்
மலர் தூவிய பாதைகள் சில
முள்தைத்த அனுபவங்கள் பல

கடந்து விட்ட காலங்கள் பலவே
கசந்து விட்ட நினைவுகள் பல
மலர்ந்து நின்ற கனவுகள் சில
மயங்க வைத்த கணங்களும் சில

நானென்னும் பள்ளியிலே படித்தேன்
நான் பல பாடங்கள் வாழ்வில்
சித்தியெய்தும் காலம் வரும் போது
சித்தத்தில் உறைந்த உண்மை ஒன்று

என்னை நானே அறியாமல் சென்ற
எண்ணற்ற வருடங்கள் தந்த
எண்ணிக்கையற்ற அனுபவங்கள்
என்னுள் இருந்த "என்னை" ஆழித்தன.

-சக்தி சக்திதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு