........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 628

வாழ்க கற்பு!

என் கண்ணீரின் காயங்களுக்குள்
நிழலாய் வந்து போகும்
உன் முகம்.
உன் வருடுதலுக்காய்
ஏங்கும் என் மனம்.
உன் நினைவுகளின் சமாதியில்
மெழுகாகும் இதயம்.
நினைத்தேனும் பார்த்ததில்லை
என் கவிதைகளின் முகாரியாய்
நீ இருப்பாய் என்று.
காலத்தின் பயணிப்பில்
விழியோர சுருக்கங்கள்
வயதை காட்ட
என்றேனும்
நான் உன்னைச்
சந்திக்கக்கூடும்.
இன்னும் நம்பிக்கை
மீதமிருக்கிறது..........
அம்மா
சிறுவயதில் சொல்லிக்கொடுத்த
கற்பும் குடும்ப கௌரவமும்
பத்திரமாய் நினைவுப் பரணில்.
வாழ்க கற்பு!

-முனைவர். வி.தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு