........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 633

இருக்கும் வரை...!

உணர்வுகொள்... தோழனே!
உணர்ச்சி வயப்பட்டால் விலங்கு
உணர்வு வயப்பட்டால் மனிதன்
நீ மனிதனாய் இயங்க
அன்பெனும் உணர்வை
ஆழ்மனதின் ஆழத்தில்
ஆணிவேராய் பதித்துக்கொள்...!

இயற்கையின் படைப்பில்
எல்லாம் உயர்ந்ததுதான்
எல்லாப் பாதைகளும்
இடம்நோக்கிதான் நகர்கிறது
உன் நகர்தல் காடா? வீடா?..
இன்சொல் இருக்க
வன்சொல் பேசாதே
புல்லுக்கும் உணர்வுண்டு புரிந்துகொள்...!

அருகிக் கிடக்கும் அன்பை
உலகமெங்கும் பெருகிக்கிடக்க
உள்ளமெங்கும் உணர்வுகொள்...
சிறுகச் சிறுகத்
தொலைந்துகொண்டிருக்கும்
மனிதத்தை..
அன்பெனும் சிறகால்
அடைகாக்க முயற்சி செய்...!

மனித உயிரின் எடை
இருபத்தொன்று கிராம்...
இறந்தால் பயனற்ற நாம்
இருக்கும் வரையிலாவது பயன்தருவோம்
வாசிப்போம்,நேசிப்போம்
உள்ளம் மட்டுமல்ல
உலகும் வளமாகும்...!

-தியாக. இரமேஷ்.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு