........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 634

அய்யோ... வேண்டாம்...!

பக்கத்துத் தெரு
பங்களாவில்
பணக்காரியும், அவள்
பதியும்
பேசிக் கொண்டிருந்தார்கள்
சர்க்கரை 300 மில்லியாம்..

பறந்து வந்தேன்
ஓலைக் குடிசைக்கு..
ஓமக்குச்சி
சொல்லிக் கொண்டிருந்தாள்
ரத்தத்தில் சோகையாம்..

வேதனையோடு
வெளியில் வந்தேன்..
சிகப்பு விளக்கு சிங்காரி
கண்ணில் பட்டாள்..
நல்ல நேரம்
நழுவ விடக்கூடாது..
நாணிக் கோணி அவள்
மேனி தொடப் போனேன்..
தொலை பேசித் தோழியிடம்
தனக்கு எச்.ஐ.வி. என்றாள்...
எடுத்தேன் ஓட்டம்..!

என் கணவனிடம் சொன்னேன்
“இனி மனித ரத்தம்
பருக மாட்டேன்
மரத்தின் சாறே போதும் எனக்கு,
அதில் எந்தப் பழுதும் இல்லை”
என்று..!

(ஒரு கொசு சொன்ன கதை)

-பாளை சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு