........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 635

பஞ்ச பூதங்கள்...!

வானம் எனும் பூதம்
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க
நிலம் எனும் பூதம்
சற்றே சோம்பல் முறிக்க
நீர் எனும் பூதம்
ஊர் வழி ஓடி
தீ எனும் பூதம்
கிடைத்ததை எரித்துத் தள்ள
காற்று எனும் பூதம்
விரைவில் செய்தியைப் பரப்ப...
ஜப்பான் படும் பாட்டைக்
கண்கூடாகக் காணும் பொழுது
இயற்கையின் ஐந்து கூறுகளை
உணர்ந்து நம் முன்னோர்கள்
பஞ்சபூதம் என்று அழைத்ததன்
காரணம் புரிந்தது தெளிவாக!

-சித்ரா சிவக்குமார், ஹாங்காங்.

 

 

 

 

 

 

 

m

 

சித்ரா சிவக்குமார் அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு