........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 643

வருகிறது... மரணம்!

வாழ்ந்த காலம்
வசந்த காலமோ இல்லை
வாடிய காலமோ...
முடிவைச் சொல்லும் நேரம்!

வாழ்க்கைச் சுமைகளை
வருத்தமின்றி துரத்த
வழங்கப்பட்ட வரம்!

இது வந்து விட்டால்
இனி தப்பிக்க முடியாது!
இதில் யாரும்
ஏமாற்ற முடியாது!!

இருந்தாலும் அது வரை
ஆடும் ஆட்டம்
ஓடும் ஓட்டம்...
அப்பப்பா....
எல்லாம் என்னால்தான்
எதுவும் தன்னால்தான்
என்று எல்லோர் மனதிலும்
கர்வம்...! கர்வம்...!!

ஆனால்
ஒவ்வொருவருக்கும்
நாள் குறித்து நேரம் குறித்து
வருகிறது... மரணம்!

- முனைவர் வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு