........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 644

களை எடுக்க ஆள் தேவை!

வயல் உழுது
வரப்பு வெட்டி
நீர் பாய்ச்சி
நட்டு வைத்த
நெல்லு நாத்து
களை எடுக்க
ஆள் தேடி
அலுத்துப் போனேன்.

ஓய்வின்றி உழைத்து
கழைத்து உறங்கினேன்;
நடு சாமம்:
ஆந்தையின் அலரல்
நரியின் ஊளை
நாயின் ஓலம்
நெல்வயலில் களைகள்
கருவேல மரமாக
விண்ணோக்கி வளர்கிறது;
கோடாரியால் வெட்டினேன்
கோடாரியை விழுங்கியது.

பாய்ச்சும் தண்ணிர்
புல்லுக்கு போகையில
விளைந்து நிற்க
நெல்லுக்கு முடியில
நெல்வயல் களையண்டி
கருவேலங் காடானது
கனவு கண்ட
கண்களைச் சுமக்க
சக்தியற்றுப் போனது
எனது உடல்.

களைகள் ஓங்கி
வளரும் மண்ணில்
கடமைகள் குறி
வீங்கிச் சாகையிலே
குறியோடு நிக்குது
குள்ள நரிகள்
குட்டிப்போட்டு வளர்க்குது
கருவேலங் காட்டினிலே!
கொடிப் பிடித்து
நிற்குதுங்க நாட்டினிலே!!

- முனைவர் கு. சிதம்பரம்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர்.கு.சிதம்பரம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு