........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 647

காதலா..?

நான் போதித்ததுமில்லை
அவள் கற்றுக் கொண்டதுமில்லை..
என் பேச்சை அவள் ரசித்தாள்
அவள் குரலுக்குச் செவி மடுத்தேன்..

அவள் சிரித்தபோது
நானும் சிரித்தேன்..
அதன்பின்
சிரிக்கும் பொருட்களிலெல்லாம்
அவள் முகம் தரிசித்தேன்..

அவளைத் தொட்ட தென்றல்
என்னைக் கடந்தபோது
அவள் சுகந்தத்தை
என் சொந்தமாக்கினேன்..

அவளுக்குத் தெரியாமல்
அவளைத் தொடர்ந்த நான்
நிலவின் குளுமையை
அவள் நிழலில் உணர்ந்தேன்..

நான் அவளைப் பார்த்தேன்
அவள் தூரமாய்த் தெரிந்தாள்
அவள் என்னைப் பார்த்தாள்
என் அருகில் அவள் இருந்தாள்..

தெரியாமல்
அவள் கை தொட்டதில்
தெரிந்தது
என் கையில் மின்சாரம்..!
வியந்த நான்
அவள் விழிகள் நோக்க
மலர்ந்த அவள் கண்கள்
மறுபடியும் மொட்டானது,
தலையும் தானாய்
தரை கவிழ்ந்தது..!
இதுதான் காதலா..?

-பாளை.சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு