........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 648

பொன்னான வாக்கு?

எச்சக்கலயை
மச்சக்காளையாக்குவது.

எலியைப்
புலியாக்குவது.

சாத்தானைச்
சம்சாரியாக்குவது.

ஊன்றுகோலைச்
செங்கோலாக்குவது.

கோவணாண்டியைக்
கோடீஸ்வரனாக்குவது.

வல்லவனை
வீழ்த்துவது.

கொடியவர்களைக்
கோட்டைக்கனுப்புவது.

கள்வனை
வள்ளலாக்குவது

நல்லவனைக்
கள்வனாக்குவது.

இலவசங்களுக்குப்
பல்லிளிப்பது.

மொத்தத்திலெம்மை
அடிமையாக்குவது.

-முனைவர். கு. சிதம்பரம்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர்.கு.சிதம்பரம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு