........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 655

நம் காதல்

கைபேசி காற்றில்தான்
சுவாசிக்கிறது
நம் காதல்!

நம் காதல் மொழி
காற்றிற்க்கும் தெரிந்திருக்கும்
காற்றலையில்
பேசிக்கொள்வதால்!

என் கன்னத்தைவிட
செவிகளுக்குத்தான்
உன் இதழ்கள் பரிச்சயம்!-
கைபேசியில் தானே
முத்தமிடுகிறாய் தினம்!

நடுநிசி நித்திரை கலைகிறது-
கனவில்
உன் காதல் மொழியால்!

நீ காற்றோடு
கைகோர்த்து நடைபோடுகிறாய் தனியே!
நான் விண்மீன்களை
எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனியே!

உன் தெருவிளக்குகள்
உன்மீது காதல்கொண்டு
கண்சிமிட்டுவதாய் சொன்னாய்!
என்னிடம்
நிலவும்கூட வெட்கம்கொண்டு
முகம்காட்டுகிறது
மெதுமெதுவாய்!-
இவைகளுக்கென்ன பொறாமை
நம் காதல் மேல்!

எப்போதும் இதுபோல்
சுவைத்ததில்லை-
நீ என்னை நினைக்கவில்லையென
பருக மறந்து
தாக்கத்தில் விக்கல் வந்தபின்
காத்திருந்து
பருகும் நீர்!

மௌனம் கலைக்க
ஒரு முத்தம்!
துயில் கலைக்க
ஒரு கனவு!
காதல் வளர்க்க
ஒருக்கவிதை!..........
ஏதாவது ஒன்றை
குறுந்தகவல் அனுப்பு,
அடுத்த மாதமாவது
விடுமுறைகிடைக்கும்
அதுவரை நான் வாழ!

-தோழன் சபரிநாதன்.

 

 

 

 

 

 

 

m

 

தோழன் சபரிநாதன் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு