........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 654

மீண்டும் பிறப்போம்...?

மறக்க நான்
நினைத்தாலும்
அவளது நினைவுகள்
என்னை மறக்கவிடுவதில்லை...!
என் இதயம்
என்னிடம் கேட்கின்றது
ஒரு கனமும் இடைவிடாமல்
உனக்காக – நான்
துடிக்கும் போது
என்னை நினைக்காமல்
அவளின் நினைவுகளை மட்டுமே
சுவாசிக்கின்றாயே?
நீ என்ன பைத்தியமா
உன்னை மறந்தவளை
நீ மறப்பது தானே
நியாயம்...!
என்ன பதில் சொல்வது
பாலாய் போன
இந்த மனம்
அவளை மட்டுமே
நினைக்கின்றது...
அன்பினால் உண்டாகும்
வலியை
என் இதயம்
ஏற்க மறுப்பதேனோ?
அன்பு என்றும்
ஆளைக்கொல்லும் விசம்
என்பதை நீ
இன்னுமா புரியவில்லை
என் அன்பை
அவள் புரியவில்லை
என்பதற்காக என்
உயிரை நானே
வெறுப்பதா?
அவளை தவிர
வேறொன்றும் அறியாத
என் இதயம்
வாழ்வோ.... சாவோ...
அவளோடு போகட்டும்
அன்பினால் மட்டுமே
அவளை மன்னிக்க முடியும்
வலிகள் ஆறும்போது
நாங்கள் மீண்டும்
பிறப்போம்
புதிய அன்போடு... ... ...?

-த. சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு