........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 653

நேரமில்லை...!

என் கருக்கல்களைத்
தீட்டிய சிற்பிகளை
நலம் விசாரிக்க...
காலக் கோடரி
என் உணர்வுக் கிடங்கின்
ஆழம் அகழ்ந்து
கதறுதல்களின் எதிரொலிப்பில்
பின் வாங்கிப் போன
பொழுதில்...
என் கண்ணீருக்கு
இனிமைகளைப் பரிசளித்த
இதயங்களைத் தொட்டுப் பேச...
இறந்து போன
நினைவுகளை
இன்னும் ஒருமுறை
திருப்பிப் பார்க்க...
வளர்த்து ஆளாக்கி
என்னைப் பற்றி
யாரோ சொன்னதாய்
தொலைபேசியில் நெகிழ்ந்து போகும்
என் நேசத்தின்
பொக்கிஷத்தை
நேரில் பார்த்து நலம் காண...
மீதமிருக்கும்
வாழ்க்கைப் பக்கங்களைக்
கண்ணீரின்றிக் கடத்த
ஓடிக்கொண்டே இருக்கும்
எனக்கு நேரமில்லை...!

-முனைவர். வி. தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு