........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 652

நூலகம்

புத்தகப் பூக்களின்
பிருந்தா வனங்கள்!

ஞானத்தை
அள்ளி வழங்கும்
நயாகரா வீழ்ச்சி!

இறந்த ஆத்மாக்களின்
எண்ணங்களைப்
பதிவு செய்து வைத்திருக்கும்
பதிவு அலுலகம்!

வாழ்க்கை அகராதியின்
வசந்த காலத்தை
வேரூன்றி வார்த்த விருட்சங்கள்!

சிதறி விழுந்த
சித்தாந்தங்களைச்
சேகரித்து வைத்திருக்கும்
சேமிப்பு வங்கிககள்!

எழுத்துக்களின் வடிவில்
எண்ணங்களின் குறிப்பில்
மேடுகள்!
மொத்தத்தில் பல
பிரளயங்களை
தனக்குள் பொத்தி வைத்திருக்கும்
பிரபஞ்சம்!

நம் ஞானக்கண் திறக்க
மோன தவமிருக்கும்
தவக்குருக்கள்!

ஏழையைக் கூடக்
குபேரனாகக்
குடியேற வைக்கும்
மந்திரப் பாடசாலை

வைரமுத்துவிற்கு
வைரவரிகள் பிறக்க
ஆக்கமாய் அமைந்த இடம்
வடுகபட்டி நூலகம்!

வாழ்க்கையின் அஸ்திவார
அமைப்புக் கூடுகளை
அலங்கரிக்கும்
அத்தியாவசியப் பொருட்களின்
பொக்கிசம்!

சோம்பேறிகளின்
இளைப்பாறும் மடம்
உற்சாகவாதிகளின்
உல்லாசக் கூடம்!

மரணத்தை விழுங்கி
ஏப்பம் விடும்
அழியாத
அமுத மழைச் சாரல்கள்!

கலை மகளின்
நிரந்தரக்
குடியிருப்புக் கோட்டை!

-முனைவர். மா. தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு