........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 657

நினவைக் கடத்தும் சூரியன்?

உன் பார்வை சூட்டில்
தினம் தினம் சுடப்படுவதால்
சுருங்கி விட்டது என்
இதயம்...

சூரியப்பார்வையில் எந்தப்
பொருளும் தப்பாது
நான் மட்டும் உன் பார்வையில்
தப்பிக்கிறேன்...

உன் பார்வை என்னை சுட்டாலும்
பரவாயில்லை, உன் சூரியப் பார்வையின்
சூடுக்காய் தினம் தினம் ஏங்குகிறேன்
நீ செல்லும் பாதையில்...

உன்னை மறக்க நினைத்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தின் அடி ஆழத்தில்
சுருங்கி விரிவதால்
உன் நினைவலைகள்
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
என் உடல் முழுதும் கடத்தப்படுகிறது....!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு