........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:66

ஊமைக் கனவுகள்...

சிறகிழந்த பறவை
சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டது அதற்குத்...
தெரியவில்லை சிறகிழந்துவிட்டோமென்று
ஊமைக் கனவுகள்
உண்மையாகுமோ...
உறக்கம் தழுவாதா எனது
விழிகளும் உறங்க மறுக்கின்றன
அழியாத உனது நினைவுகளும்
அழிய மறுக்கின்றன...
உயிரோடு ... உறவோடு
கலந்த உனை மறப்பது இயலுமோ
அன்பே என்
மனதிற்குத் தெரியவில்லை
நான் ஓர்
மனதிற்குத் தெரியவில்லை
நான் ஓர்
சிறகிழந்த பறவையென்று...
சிறகிழந்த பறவையாய்
பிறந்தது பறவையின் குற்றமோ?
இல்லை ... ஊனமாய்ப்
படைத்தது இறைவனின் குற்றமா?
என் ஊமை மனதின் உன்னத
அன்பு புரியுமோ...?
உன் மனதில் தவிக்கின்றேன்
உன்னை அடையும் வரையில்
காத்திருப்பேன் கல்லறை வரையில்...

- த.சத்யா, இராஜபாளையம்.

 

 

m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.