........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 661

செந்தமிழே...!

தித்திக்கும் செந்தமிழே
தெவிட்டாத பைந்தமிழே
மொழிக்கு
முதலில் தோன்றிய
முத்தமிழே!
உலகெங்கும்
உன் கால்தடம் பதிந்த
சுவடுகள்...
உன் எல்லையை அல்லவா?
பறைசாற்றுகின்றன...

பிறமொழி பேசினாலும்
வியந்து போனது
உன்னிடம் தானே!
நீ வீசிய வலையில்
சிக்காதவர்...
யாரும் உண்டோ?

உன் மடியில்
சிறிது நேரம்
யார் உறங்கினாலும்...
உன் பிள்ளையைப்போல் அல்லவா
வாரிஅனைத்துக் கொள்கிறாய்

தமிழன்னையே!
மொழி நாடு இனம்
கடந்து
உன் புகழ் பரப்ப
சங்கத்தமிழ் அனைத்தும்
எனக்குத் தா!

-ப.இரமேஷ்.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு