........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 660

ஆசை?

இமயம் ஏறி
பெயர் பொறித்து
இறங்கி வர
ஆசையில்லை..!

ஆழ்கடல் மூழ்கி
அதிசய முத்தெடுத்து
அணிகலன் செய்து
அணிந்து கொள்ள
ஆசையில்லை..!

கடற்கரை மணலை
கையில் எடுத்து
ஒவ்வொன்றாய் எண்ணி
கணக்கிட்டுச் சொல்லி
கின்னஸ் சாதனை புரிய
ஆசையில்லை..!

ஒலிம்பிக்கில் ஓடி
தங்கம் வென்று
தாயகம் திரும்ப
ஆசையில்லை..!

சுட்டு விரலால்
சந்திரனைத் தொட்டு
பொட்டு வைக்க
ஆசையில்லை..!

ஆனாலும்
இறந்த அப்பாவின்
இறப்புச் சான்றிதழை
“எதுவும்” கொடுக்காமல்
பெற்றுவிட
ஆசை தான்..!!

-பாளை.சுசி.

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு