........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 659

குப்பைத் தொட்டி?

உரமுள்ள சிந்தனைகள்
இல்லா
சேற்றுப்பள்ளத்தாக்கு.

இனம், மொழி, சமயம்
இல்லா
மனிதநேயம் மறந்த
அழுக்குப் பட்டறை.

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசும்
கள்ளச் சிந்தனை.

பக்கத்து வீட்டுக்காரன்
பசியில் துடிக்க
வயிறு நிறைத்து
ஏப்பம் விடும்
கீழ்மைக் குணம்.

தோல்விகளைப் புறந்தள்ளும்
வீறு கொண்ட
சிந்தனை இல்லா
நொண்டிக்குதிரை.

இத்தனையும்
குடியிருக்குமானால்
அந்த மனதிற்கு
இன்னுமொரு மறுபெயர்

''குப்பைத்தொட்டி''.

-முனைவர் வி.தேன்மொழி, சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு