........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 663

இரவுப் பயணம்!

என் தனிமையின் நீண்ட
இரவுகளில் சுகம் பெற
முயலும் போது உன்னைப்
பற்றிய நினைவுகளில் நீந்தும்
போது மட்டுமே உச்சகட்டம்
அடைகிறேன்......

ராத்திரியின் படுக்கையில்
பயணப்படுகையில் நிலா
போன்ற உன் முகமே என்
நீண்ட இரவைப் பயணிக்கிறது

சரியாய் நித்திரை கொள்ள
முயலுகையில் என் நீண்ட
இரவின் நீளம் குறையும்
விடியல் காலையில் இரவு
தூக்கத்தின் ஆழம் அழகாகிறது

தேனுக்குக் கிளம்பும் வண்டாய்
மீண்டும் முழு முயற்சியுடன்.....
அழகிய காலையில்
உனக்காய்.....
எனக்காகிய
காதல் தேன் பருக
மீண்டும் பயணப்படுகிறேன்..!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு