........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 664

என் இதயம்!

உனக்கும் எனக்கும்
ஒரு அறிமுகமில்லை
பேருந்தில் உன்னை பார்க்காதவரை!
நம் விழிகளின்
பார்வை உரசலில்
உனக்கும் எனக்கும்
ஓர் புரிதல் ஒப்பந்தம்!
அமர்ந்திருக்கும் உன்னிடம்
என் நோட்டு புத்தகங்களை
தந்துவைப்பதில்
உன் மனதில் இடம்பிடித்துவிட
முயற்சி!
நம் இதழ் புன்னகை
பரிமாற்றத்தில் மட்டும்
பல ஜென்மங்கள்
பழகி பேசிதீர்த்துவிட்ட
திருப்தி!
காதல்-
இயற்கையின் வரைமுறையா?
இளமையின் வன்முறையா?
உன் பதிலென்ன காதலி...?
எப்போதும் திறந்துதான் இருக்கும்
என் இதயம்!-
குழப்பமெல்லாம்
நீ என் உள்ளே வருகிறாயா?
வெளியே வருகிறாயா?...
தினம் இருபது நிமிட பயணத்தில்
எட்டு மணிநேர
என் கனவுகளை
நனவாக்கிவிடும் அவசரம்!
என் புத்தகங்களைத்
திரும்பபெறுகையில் நிகழும்
உன் சுண்டுவிரல் தீண்டலில்
என் கற்பனைகள் சிறகடிக்கும்
அதிசயம்!
உன் நிறுத்தம் வந்துவிட்டதாய்
இறங்கி சென்றுவிட்டாய்!
அந்த செம்மண் தடத்தில்
பேருந்து சக்கரத்தின் தடயங்களையும்
அழித்துவிடத்துடிக்கும் காற்று!
உன் விழிதந்த சலனம்
சேமித்துவைக்கும்
என் இதயம்!

-தோழன் சபரிநாதன்.

 

 

 

 

 

 

 

m

 

தோழன் சபரிநாதன் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு